நோபல் இயற்பியல் பரிசை வென்றார் பிரான்சிஸ் ஹால்சன்


ரோயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி இன்று செவ்வாய்க்கிழமை  பெல்ஜியம் நாட்டின் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசை வழங்கியது.

ஐஸ்க்யூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அவர் ஆற்றிய தீர்க்கமான பங்களிப்புகள் மற்றும் வானியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்று அகாடமி தெரிவித்தது.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்டவருக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று தொடங்கியது.

No comments